பக்கங்கள்

Saturday, August 19, 2017

ஆப் கி மோடி சர்கார்....நமஸ்கார்.....

*அனுப்புநர்*
   *குசும்புகாரன்*
    *தருமபுரி மாவட்டம்*
     *தமிழ்நாடு*

*பெறுநர்*
*மாண்புமிகு மோடி   அவர்களுக்கு,
இந்தியப் பிரதமர்
புதுதில்லி.

நாள் - 21.6.2017

ஐயா வணக்கம்,

*பொருள் -* தாங்கள் தருவதாக வாக்குறுதி அளித்த ரூ 15,00,000 பணத்தை உடனடியாக 
                     எனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்:-


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் பிரதமராகப் போட்டியிட்டுப் பெருமைக்குரிய வெற்றியை ஈட்டினீர்கள்..மூன்று முறை சென்னையில் அப்போது பரப்புரை செய்தீர்கள்.

அந்த மூன்று கூட்டத்திலும் , "நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடிக் கறுப்புப் பணத்தை மீட்பேன் !*

 மீட்டவுடன் *ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கில் ரூபாய் பதினைந்து லட்சம் செலுத்துவேன்* என்றீர்கள் !அதையும் *நூறே நாளில் தருவதாக*ப் பொது மேடையில் வாக்குறுதி அளித்தீர்கள் !

 உங்களைத் தொடர்ந்து பேசியவர்களும் அதை ஆமோதித்தார்கள் ! இந்தியா முழுவதும் இதைச்சொல்லியே பரப்புரை செய்தீர்கள் ! பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி செய்கிறீர்கள் !

நீங்கள் *வாக்குத்தவறாத பிரம்மச்சாரி* என்று எங்கள் ஊர் எச்.ராஜா அவர்களும் பலமுறை கூறியுள்ளார். ஐயா , 

நீங்கள் பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கிய அடுத்த நொடி ,உங்கள் வாக்குறுதியை நம்பி *பதினைந்து இலட்சம் கடனாகப் பெற்றுவிட்டேன் !*

வட்டி கொடுத்து என்னால் சமாளிக்க முடியவில்லை. நூறுநாளில் தருவதாக,தங்கள் வாக்குறுதியை நம்பிக்  கடன் வாங்கி விட்டேன்.

100 நாள் இப்போது 1000நாளாகி விட்டது !

ஐயா நீங்கள் மானஸ்தன் !

பலமுறை உங்களைத் தொடர்பு கொண்டேன். நீங்கள் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள் !

*நீங்கள் கறுப்புப் பண மீட்பில் இருந்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் !*

 எனக்குக் கடன் தந்தவர்களும் அதை நம்பினார்கள் !

ஆனால்,ஐயா
கடந்த சில மாதங்களாகக் கறுப்புப் பண விவகாரம் குறித்துப் பேச மறுக்கிறீர்கள்.  உங்கள் 
*மன் கீ பாத்திலும் பதினைந்து லட்சம் பற்றிப் பேச மறுக்கிறீர்கள்!* உங்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

 ஆனால் , எனக்குப் பணம் கொடுத்தவர்களைச் சமாளிக்க இயலவில்லை . அதில் பல வங்கிகளும் அடக்கம். உங்கள் *அருண்ஜெட்லி , வாராக் கடன் வசூல்களை வேறு தீவிரப்படுத்தி உள்ளார் !*

ஜி.....விஜயமல்லய்யாவைப் போல் நான் ஓடி ஒளிபவன் அல்ல !

என் நேர்மையை வங்கிகள் சந்தேகிப்பதில் எனக்குக் கவலை இல்லை !

அதன் மூலம் உங்கள் *நேர்மையையும் அவர்கள் சந்தேகிப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை !*

எங்கள் வீட்டில் மொத்தம் 4 பேர். நாங்கள் அனைவரும் உங்களுக்கே வாக்களித்தோம்.

 மொத்தம் *நீங்கள் எமக்குத் தரவேண்டிய தொகை 60 லட்சம் !* வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சிக்கே  வாக்களிப்போம். இது உறுதி ! உடனடியாகக் கீழ்க்காணும் 
எனது *வங்கிக் கணக்கில் ரூபாய் அறுபது லட்சத்தை சேர்க்கவும் !*

இது அவசர வேண்டுகோள் ஐயா ! *நல்லவேளை நான் விவசாயி இல்லை..* 

 இந்நேரம் கடனுக்காக என் *கை காலை முறித்திருப்பான்  வங்கி அடியாள் !* ஜி

ஐயா..

ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த இந்தியர்களும் பணத்தைக் கேட்டால் என்ன செய்வீர்கள் ?

தயவுசெய்து *உடனே பணத்தைப் பட்டுவாடா செய்யுங்கள் !*

வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நீங்கள் சென்னை வரும்போது *நமக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இருக்கக்கூடாது !*

ஜெய்ஹிந்த்..

ஸ்வச் பாரத்...

ஆப் கி மோடி சர்கார்
நமஸ்கார்...

*இணைப்பு -*
தலைக்குப் பதினைந்து இலட்சத்தை 100 நாளில் தாங்கள் தருவதாக உறுதி அளிக்கும் காணொலி.

*குறிப்பு -*
 ஜி ...
இதுகுறித்துப் பலமுறை உங்கள் முகநூல் இன்பாக்சில் தகவல் அனுப்பியுள்ளேன். 

*முக்கியக் குறிப்பு -*
ஐயா இக்கடிதத்தைப் பகிரும் *என் நண்பர்கள் வங்கிக் கணக்கிலும்* 15,00,000 செலுத்தவும் .
 நன்றி. !

3 comments :

  1. forgot to provide your account number in the mail.chances are lean.....

    ReplyDelete
  2. வித் ராஜின்னு என் பெயரையும் சேர்த்துக்கோங்க சகோ

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com