வெள்ளி 14 2017

வலிப்போக்கனை ஏமாற்றிவிட்ட மோடி...!!!!

அன்று





வலிப்போக்கனும்..அவரைக் காண வந்த நண்பரும்.. நலம் மற்றும் குடும்ப நலம், நாட்டு நலத்தோடு பிற விசயங்களை பேசிவிட்டு..சிறிது இடைவெளியில்  தொலைக் காட்சியில் செய்தி சேனலை பார்த்துக் கொண்டு இருந்தனர்..

அப்போது தொலைக்காட்சியில்  மோடி இஸ்ரேல் பயணதுக்கு செல்வதற்க்காக விமான படிக்கட்டில் டக்..டக்..டக்டக் என்று ஒவ்வொரு படிக்கட்டாக  தம் பலத்தை காட்டிஏறிக் கொண்டு இருந்தார்

அந்த நேரத்தில் வலிப்போக்கன் நண்பரிடம்  தன் புத்திசாலிதனத்தை காட்டுவதற்க்காக..“ இப்போது பாருங்கள்..,அண்ணன் இடது கையை ஆட்டி நமக்கு டாட்டா சொல்வார் என்றார்.

நண்பரும் வலிப்போக்கனும் கவனமாக பார்த்தக் கொண்டு இருக்கையில்..
 படிக்கட்டில் ஏறி சென்று திரும்பிய மோடி வலது கையை ஆட்டி டாட்டா  காட்டி வலிப்போக்கனை ஏமாற்றி விட்டார்..

பார்த்துக் கொண்டு இருந்த நண்பர் சிரித்துவிட்டுச் சொன்னார். நண்பரே.. மோடி எப்போதும் இடது கையை ஆட்டுவதுதான் வழக்கம். நீங்கள் “ அண்ணன்
இடக் கையை ஆட்டுவார் என்று நீங்கள் சொன்னாது அவர் காதுக்கு கேட்டுவிட்டது.. அதனால்தான் மோடி உங்களை ஏமாற்றி விட்டார் என்றார்

வலிப்போக்கனுக்கு மூஞ்சி செத்து போச்சு, சே.... தம் புத்திசாலிதனத்தை நண்பரிடம் காட்டலாம் என்றால் ..மோடி திடிரென்று வலக்கையை ஆட்டி 
விட்டாரே.. என்று நிணைத்து  எதுவும் அப்போதைக்கு எந்த யோசனையும் தோன்றாததால் அமைதியாக இருந்தார்.செய்தி முடிந்து விளம்பரம் ஓடிக் கொண்டு இருந்தது.

சிறிது இடைவெளிக்குப்பின் தாமதமாக வலிப்போக்கனுக்கு ஒரு யோசனை தோன்றியதை சொன்னார்

இஸ்ரேலுக்கு இடது கையை ஆட்டுவது பிடிக்காது என்பதால்..“ அண்ணன் இங்கேயே வலது கையை ஆட்டி பயிற்சி எடுத்து என்னை ஏமாற்றி விட்டார்


Image result for மோடி
Add caption


5 கருத்துகள்:

  1. அவர் உங்களை மட்டுமா ஏமாற்றினார் :)

    பதிலளிநீக்கு
  2. எங்கிட்டோ இப்படியே ஆட்டி காலத்தை ஓட்டி விட்டார்

    பதிலளிநீக்கு
  3. //சிறிது இடைவெளிக்குப்பின் தாமதமாக வலிப்போக்கனுக்கு ஒரு யோசனை தோன்றியதை சொன்னார்
    இஸ்ரேலுக்கு இடது கையை ஆட்டுவது பிடிக்காது என்பதால்..“ அண்ணன் இங்கேயே வலது கையை ஆட்டி பயிற்சி எடுத்து என்னை ஏமாற்றி விட்டார்//

    இடது கையை ஆட்டி டாட்டா காட்டுவது என்பது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, அவர்களது அதே அப்ரகாமிய மதத்தை குரூப்பை சேர்ந்த இஸ்லாமிய மதத்திற்கும் பிடிக்காது. டாட்டா காட்டுவது வலது கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு மதநூலில் தரப்பட்டுள்ளது. அதனாலே பிரதமர் இந்த தடவை இஸ்ரேல் செல்லும் போது தனது நாட்டில் உள்ள இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோரை மகிழ்விப்பதற்காக வலது கையை ஆட்டி டாட்டா காட்டினார்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...