பக்கங்கள்

Thursday, December 14, 2017

அவன் எனக்கும் மூத்தவன்..”நாங்க வொயர்லெஸ்ல தொடர்பு கொண்டோம். யாருமே உதவிக்கு வரல்ல படகு கவுந்து போச்சு அதுல கிடந்த கம்பானை பிடிச்சிக்கிட்டு தொங்கிட்டிருந்தோம். நாங்க 8 பேர் அதுல எனக்க அண்ணனுக்கு வயது 60க்கு மேல ஆள் நல்ல பலசாலி. ஒரு இரண்டு மணி நேரம் கழிச்சு அவரோட உயிர் பிரிய ஆரம்பிச்சிட்டுச்சு. என் மகனும்  கம்பானை பிடிச்சிட்டு கிடந்தான்.  “லே பிள்ள பெரியப்பாவ பிடியடா”ன்ணேன். ஒரு கைல கம்பானை பிடிச்சிட்டு இடது கைல அவரை ஏந்தி பிடிச்சிருந்தான். நானும் போய் ஒரு கைய கொடுத்து அவரை ஏந்திக்கிட்டேன். ஆனா அப்படியே உயிர் போயுடுச்சு. மூணு மணி நேரம் மிதந்துக்கிட்டு கிடந்த போட்டு மூழ்க ஆரம்பிச்சுது நான் எங்க அண்ணனை அப்படியே விட்டுட்டேன் (பேச முடியாமல் அழுகிறார்) அவன் முங்கிப் போய்ட்டான். அப்புறம் நீந்த ஆரம்பிச்சோம் ஒவ்வொரு ஆளா செத்தாங்க. கண்ண தொறக்க முடியாது ஒவ்வொருத்தர் பேர கூப்பிட்டு கூப்பிட்டு சவுண்ட் கொடுப்போம் பதிலுக்கு சவுண்ட் வந்தா உண்டு இல்லண்ணா இல்ல.. ஒரு இரவு ஒரு பகல் முடிஞ்ச பிறகு ஒவ்வொரு சவுண்டா இல்லாம போச்சு ஒரு சில போட் வந்துச்சு, ஹெலிகாப்டர் சத்தம் எல்லாம் கூட தூரத்துல கேட்டுச்சு ஆனால் யாரும் மீட்கல்ல. 

மகனுக்கா உதடும் , கண்ணும் உப்பி வீங்கிடுச்சு அப்போ ஒரு கப்பல் சத்தம் கேட்டுச்சு. ஆனால் அது ஆழ் கடல்ல கேட்டுது. அந்த சத்தம் வந்த திசைல தவள மாதிரி நீந்தினோம், நீந்த முடியல்ல. செத்துடோம்ணு நினைச்சோம். ஆனால் அந்த கப்பல் காரங்க எங்கள்ல சிலரை மீட்டாங்க. அது  ஜப்பான் நட்டு கப்பல்.

“என் அண்ணன் என் கைல செத்தாம்லியா அவந்தான் எனக்கு கடத்தொழில் சொல்லிக் கொடுத்தான்.எனக்கு  சொல்லிக்கொடுத்தவன் என் கைல இருந்தே கடலமக்கி கிட்ட போயிட்டான்”...மவுனமாக  அந்த இடது கையை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவர் எதுவும் பேசவில்லை...!

- அருள் எழிலன்,
பத்திரிக்கையாளர்.

Wednesday, December 13, 2017

இது என்ன வகையான விலங்கு....???இது என்ன
வகையான விலங்கு
என்று நானு
ராத்திரி பகலுமா
யோசித்து யோசித்து
பார்த்தேன் என்
அறிவுக்கு வரவே
இல்லை நீங்களாவது
எனக்கு சொல்லுங்கள்
படத்தில் உள்ளது
என்ன வகையான
விலங்கு என்று...?????????

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

Monday, December 11, 2017

ஒரு கோடி பரிசு அறிவித்த வீரனின் வீரம்....

Siva Kumar
திருமாவளவரின் தலைக்கு விலை வைத்த  நபரின் வீரம் என்ன தெரியுமா விலை வைத்த கையோடு காரமடையில் உள்ள தன் செட்அப் மனைவியிடம் தஞ்சம் புகுந்திருக்கிறான் ...
போதையில் உளறிவிட்டேன் என பொய் பேசியிருக்கிறான் உனக்கு எதுக்கு இந்த வேலை என அந்த செட்ட அப் மனைவியின் கையால் நைய புடைக்கப்பட்டிருக்கிறான் ...
இந்த நிலையில்தான் திருப்பூர் காவல்படை செட்அப் மனைவியின் வீட்டில் வைத்து கைது செய்திருக்கிறது நான் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறதா என முதலில் காவல்துறையிடம் எகிறியிருக்கிறான் ..
காவல்துறை அதிகாரி தன் செல்போனை எடுப்பதற்காக முற்பட்டபோது அடிக்கத்தான் தயாராகிறார் என நினைத்து ஆமா ஆமா நான் சொன்னது உண்மைதான் என வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் ..
காரமடையில் வேனில் ஏற்றியது முதல் திருப்பூர் காவல் நிலையத்தில் இறக்கப்படும் வரை ஏறக்குறைய இரண்டு மணி நேரத்தில் இருபது முறை சிறுநீர் கழித்திருக்கிறான் 

அவனின் உதறலை பார்த்து எங்களுக்கே சிரிப்பு வந்தது என காவலர் ஒருவர் வேடிக்கையாக கூறினார் ...

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு ..

தன் நாவை அடக்க தெரியாதவன் இந்த கோபிநாத்தை போல அல்லல் பட வேண்டும் என்பது ஒரு பாடமாக அமைந்துவிட்டது ..
தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கோபிநாத் இனிமேல் அப்படி சொல்லமாட்டேன் காலில் விழுகிறேன் என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்ச துவங்கியிருக்கிறானாம் ..
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நபரின் ஆதரவாக அவனின் இயக்கத்தை சேர்ந்தவர்களோ நண்பர்களோ உறவினர்களோ யாரும் வரவில்லை என்பது அவனின் திமிரை அடக்கியிருப்பதாக செய்திகள் கூறுகிறது ...
சிபிசந்தர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்